News March 26, 2024
சென்னை: ரூ.5.26 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மார்ச் 16 முதல் இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் மொத்தமாக ரூ.59.13 லட்சம் ரொக்கமும், ரூ.5.26 கோடி மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2025
Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் ஆப் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல், 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
சென்னை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், 044-25228025 ▶️சென்னை மாநகராட்சி ஆணையாளர், 044-25381330 ▶️ சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், 044-23452345 ▶️ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 044-27662400 ▶️ மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், 044-24714758 ▶️ லஞ்ச ஒழிப்புத் துறை, 044-22310989. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.