News November 26, 2025
சென்னை: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

சென்னை மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE/டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <
Similar News
News November 26, 2025
சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயிலும், அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
News November 26, 2025
15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 15 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
News November 26, 2025
எண்ணூர்: SIR-ஆல் சிக்கிய கொலையாளி…

சென்னை எண்ணூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை போலீஸார் தேடி வந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி சிக்கியுள்ளார். SIR படிவம் தொடர்பான விசாரணையின் போது, மதம் மாறி பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


