News December 11, 2025
சென்னை: ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக வரும் 15 முதல் பிப்.3ம் தேதி வரை சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் டிச.15 முதல் பிப்.2 வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். அதேபோல், எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் டிச.16 முதல் பிப்.3 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை உள்ளதா? முக்கிய அறிவிப்பு!

பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.