News October 10, 2025
சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், சுவர்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், பதாகைகள், ஸ்டிக்கர்கள், விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News October 11, 2025
குடிநீர் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை கேட்பு கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய அலுவலகங்களிலும் சனிக்கிழமை (11.10.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளில் இந்த அலுவலக கூட்டம் நடைபெறும்.
News October 11, 2025
திருமுருகன் காந்தி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வீட்டிற்கு இன்று (அக்.10) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். அதன்பொருட்டு வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News October 10, 2025
துணை நடிகையின் தாயை தாக்கிய நபர் கைது

சென்னையை அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.