News May 16, 2024
சென்னை ரயிலில் புதிய வசதி அறிமுகம்

சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 14, 2025
சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து இணைப்போக்குவரத்து அதிகாரிகளுக்கும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் வரி, ஆவணங்கள் சரிபார்க்கப்படும். கூடுதல் கட்டண புகார்களுக்கு 1800 425 5161, 97893-69634, 93613-41926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 14, 2025
அடையாற்றில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

அடையாறு பெட்ரோல் பங்க் அருகே காரில் சென்ற பிரபல ரவுடி ‘A1’ கொட்டிவாக்கம் குணா, மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிமறித்த நபர்கள், காரை நிறுத்தி சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த அடையார் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
News October 14, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (13.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*