News February 24, 2026

சென்னை: ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தப்பட்ட அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது. AC மின்சார ரயில் சேவை ஞாயிறு இயக்கப்படாது எனவும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ரயில்கள் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

சென்னை: மனைவியை பிளேடால் கிழித்த கணவன்

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரம்யா (25). இவரது கணவர் தினேஷ். கடந்த ஜனவரி மாதம் சதாம் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் புழல் சிறையில் தினேஷ் அடைக்கப்பட்டார். ரம்யா தனது கணவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார். நேற்று காலை சிறையில் இருந்து வந்த அவர், திடீரென பிளேடால் சரமாரியாக ரம்யா கிழித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை நேற்று மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 1, 2026

சென்னை: பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

image

புளியந்தோப்பை சேர்ந்த 25 வயது பெண். இவருக்கும் பிரதீபன்(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த பிரதீபன், அவரை மிரட்டி, 40,000 ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், பிரதீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

மும்பை வரை சென்று தட்டித் தூக்கிய சென்னை போலீஸ்!

image

எம்.கே.பி. நகர் போலீசார் கடந்த டிசம்பர் 15-ம் தேதி வியாசர்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, 500 உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த சரத்குமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இவருக்கு மாத்திரைகள் விற்பனை செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜாவேணு நாயக்கர் (46) என்பவரை மும்பையில் கைது செய்து, இன்று சென்னை அழைத்து வந்தனர்.

error: Content is protected !!