News October 28, 2025
சென்னை: ரஜினிகாந்த & தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, காவல்துறையினர், நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இது புரளி என தெரியவந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
அறிவித்தார் சென்னை கலெக்டர்!

சென்னை: பி.எம் யசாஸ்வி கல்வி உதவித்தொகை பெற ஓபிசி, டிபிசி, டிஎன்டி பிரிவுகளில், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், https://scholarship.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் வரும் 31ஆம் தேதி என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
மாதவரம்: சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி!

சென்னை: மாதவரம் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை சென்னை மாநகராட்சி பணியாளர்களால் அகற்றி வருகின்றனர். சென்னையில் நேற்று(அக்.27) முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தும் வகையில் நீர் உறிஞ்சும் லாரியை கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் நீரை அகற்றி வருகின்றனர்.
News October 28, 2025
மொந்தா புயல் எதிரொலி: விமான சேவை ரத்து

மொந்தா புயல் இன்று ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆந்திராவில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு வரும் 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 3 விமானங்கள் ரத்தாகியுள்ளது.


