News March 21, 2024
சென்னை: ரசாயன சிலிண்டர் வெடித்து பலி

சென்னை கொளத்தூரில் ரசாயன சிலிண்டர் வெடித்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்பரஸ் எனும் வேதிப்பொருள் வெடித்ததில் மாணவர் ஆதித்யா உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 14, 2025
சேகர்பாபு, மேயர் பிரியா வீடியோ சித்தரிப்பு: பாய்ந்தது வழக்கு

அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, 6 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் ஒரு யூடியூப் சேனல் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து புகார்தாரரான வீரலட்சுமி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
News September 14, 2025
சென்னை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News September 14, 2025
சென்னையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

கண்ணகி நகர் மயானம் அருகில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவர் நந்தகோபால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்ணகி நகரில் வசித்து வந்த இவர், நேற்று மாலை குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கினார். நீச்சல் தெரியாததே உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கண்ணகி நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.