News September 17, 2025

சென்னை மெட்ரோ WhatsApp டிக்கெட் சேவை நிறுத்தம்

image

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கான WhatsApp ஆன்லைன் டிக்கெட் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை.
இதனால் பயணிகள் CMRL மொபைல் ஆப், Paytm, PhonePe, சிங்காரா சென்னை கார்டு, CMRL Travel Card போன்ற வழிகளில் டிக்கெட் பெறலாம். அத்துடன் பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 16) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 17, எழும்பூர் – 19.9, கிண்டி – 9.6, மாம்பலம் – 34.8, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 32.3, புரசைவாக்கம் – 26.4, தண்டையார்பேட்டை – 23.4, ஆலந்தூர் 1.2, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 6.7 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

News September 17, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு..?

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று(செப்.17)ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும், டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது காலை 6.00 மணிக்கு அமலில் வந்தது.

News September 17, 2025

சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!