News May 27, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருது

image

தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.

Similar News

News November 24, 2025

JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

image

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.

News November 24, 2025

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

image

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News November 24, 2025

BREAKING: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நவ.29ஆம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!