News September 7, 2025
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 – 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு காலை 5 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் மெட்ரே ரயில்கள் இயக்கப்படும். காலை 6.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எந்த மாற்றமும் இன்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News September 7, 2025
அம்பத்துாரில் திடீர் பள்ளம்

அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில் நேற்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யபட்டது. சிட்கோ நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். சாலை 10 அடி அகலத்திற்கு பலவீனமாக இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து சாலையை தோண்டி, பள்ளத்தில் மணல் கலவையை கொட்டி, சாலையை சீரமைத்தனர். அதன்பின், அங்கு போக்குவரத்து சீரானது. 2 வாரங்களில், 2 முறை மண் அரிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
சென்னை: கேட்ட வரங்களை தரும் நிமிஷாம்பாள்

சென்னை பாரிமுனையில் உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதியில் வந்து வழிபட்டால் 5வது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க