News January 10, 2026

சென்னை: மெட்ரோ பனியால் துடிதுடித்து பலி!

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (22), போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரம்மாண்டமான கிரேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ பணிகளுக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், உபகரணங்கள் மீது முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News

News February 2, 2026

பெசன்ட் நகர் கடற்கரையில் மிளிர்ந்த ‘with Love’

image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் with love படக் குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் அனைவரும் கவரும் வகையிலும் புதிய ட்ரென்டிங்கான ஆகாய ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தினர். மேலும் விடுமுறை நாளான நேற்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்கள் வானில் ‘with Love’ என்ற வடிவில் பறந்த ட்ரோன்கள் கண்டு வியந்தனர்.

News February 2, 2026

சென்னை அருகே வீட்டிற்குள் புகுந்த பேருந்து

image

திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கிருஷ்ணசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்று. அப்போது எதிரே கரும்பு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். மேடான சாலை என்பதால் பின்னோக்கி வந்த பேருந்து முரளி என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

News February 1, 2026

சென்னை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!