News November 1, 2025

சென்னை மெட்ரோவில் சூப்பர் வேலை; ரூ.30,000 சம்பளம்!

image

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு டிப்ளமோ, BE படித்த 18-33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாதம் ரூ.27,000- 30,000 சம்பளம் வழங்கப்படும். சென்னையில்<> நவ.4,5,6,7<<>> ஆகிய தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. ஷேர்!

Similar News

News November 1, 2025

சென்னையில் வீடு தேடி வரும் ரேசன் பொருள்

image

கூட்டுறவு சங்ககளின் கூடுதல் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, சென்னையில் 15 மண்டலங்களில் வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 1, 2025

சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 1, 2025

சென்னை: பூஜை அறையில் தீ விபத்து

image

சென்னை பெரம்பூர் வெற்றி நகர் பகுதியில் வசிக்கும் 85 வயது வசந்தா என்ற மூதாட்டி, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்து 42% தீக்காயங்களுடன் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!