News July 5, 2025

சென்னை முழுவதும் உற்பத்தி செய்பவர்களுக்கு உதவித் தொகை

image

சென்னை முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6, 135 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ரூ.122.7 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Similar News

News July 5, 2025

சென்னையில் நாளை மினி மாரத்தான்

image

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

News July 5, 2025

பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்க அறிவுறுத்தல்

image

சென்னை குடிநீர் வாரியம் பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓடும் குழாய்க்குப் பதிலாக குவளையைப் பயன்படுத்தினால் ஒருமுறைக்கு 4.25 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். ஓடும் குழாய் 5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், குவளை வெறும் 0.75 லிட்டர் மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

image

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.

error: Content is protected !!