News October 3, 2025

சென்னை: மீன் வர்த்தக மையத்தில் கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சென்னை கொளத்தூரில் உள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தில் கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>> முழு விவரங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார்.

Similar News

News October 3, 2025

சென்னையில் நாளை மின் தடை அறிவிப்பு

image

சென்னையில் நாளை (அக்டோபர் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புத் தருமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

News October 3, 2025

சென்னை: டிகிரி போதும்.. கனரா வங்கியில் செம வாய்ப்பு!

image

சென்னை மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 12-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க

News October 3, 2025

தீபாவளியை முன்னிட்டு 108 ரயில்கள்

image

தீபாவளியை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சார்பில் 108 ரயில்கள் இயக்கப்படும். அவற்றில் 54 ரயில்கள் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளன. 54 ரயில்கள் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.மகேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!