News March 2, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி!

கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (57). இவரது வீட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோமின், சூரஜ், ரியாஸ்கான் உள்ளிட்டோர் பணி செய்து வந்தனர். நேற்று, கூரை அமைப்பதற்காக, இரும்பு சீட்டை எடுத்து வந்த போது மின்மாற்றியில் உரசியதில், மோமின் உட்பட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், மோமின் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
சென்னை: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ➡️வகை: மத்திய அரசு வேலை, ➡️ பணியிடங்கள்: 252, ➡️ வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், ➡️ சம்பளம்: ரூ.20,000, ➡️ தகுதி: 12ஆம் வகுப்பு, ➡️ கடைசி தேதி: 10.03.2026, ➡️ விண்ணப்பிக்க: <
News March 3, 2026
சென்னை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News March 3, 2026
சென்னையில் மின்சாரப் பிரச்னையா..?

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், கே.கே.நகர் கோட்டங்களில் இன்று (மார்ச் 3) நடைபெறும் குறைதீர் கூட்டங்களில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின் இணைப்பு மற்றும் குறைகள் தொடர்பான கோரிக்கை, குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


