News January 1, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 2, 2026
தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.02) தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News January 2, 2026
சென்னை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 2, 2026
சென்னையில் அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. நண்பர்களுக்கு பகிரவும்.


