News December 24, 2025
சென்னை – மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பழகுநர் பயிற்சி

சென்னை MTC 2026-2027 ஆண்டிற்கான ITI தொழில் பழகுநர் பயிற்சிக்காக, மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 03.01.2026 அன்று காலை 10 மணிக்கு குரோம்பேட்டை தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது. ITI (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto Electrician, Electrician, Fitter, Welder, Painter & Turner) கற்கை முடித்த மாணவர்கள் இதில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 10, 2026
சென்னை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
சென்னையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

சென்னை மாநகராட்சியில் இதுவரை 12 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 29 ,267 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை மண்டலம், கலாயணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) 13-வது முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.
News January 10, 2026
சென்னை: குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் 10ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.


