News November 7, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 4, 2026
சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
தனியார் விடுதியில் பெணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: போரூர் தனியார் தங்கும் விடுதியில், வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த வெளிமாநில பெண்ணிடம் விடுதியின் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று(பிப்.4) போலீசார், உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெளிமாநில பெண் உடமைகள் அனைத்தும் உரிமையாளர் பறித்து கொண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News February 4, 2026
சைதாப்பேட்டையில் வாலிபர் போக்சோவில் கைது!

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், சக்திவேல் (31) என்பவர் பந்தல் பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை மகளிர் போலீசார், சக்திவேலை நேற்று(பிப்.3) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


