News January 13, 2026
சென்னை மாநகராட்சி – தொழில் உரிமம் புதுப்பிப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்ய வணிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற உரிமக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டும். தொழில் உரிமம் புதுப்பிக்க, நிலுவையின்றி தொழில் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பெறப்பட்ட உரிமத்தின் நகல் மற்றும் கட்டணம் அவசியம் என தெரிவித்துள்ளது.
Similar News
News January 23, 2026
சென்னையில் பாலியல் தொழில் – அதிரடி கைது

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு – 2 குழுவினர், ஜாபர்கான்பேட்டை, காசி எஸ்டேட் 3வது தெருவில் உள்ள வீட்டை கண்காணித்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதால், சோதனை நடத்தினர். இதில், சம்சுதீன் மற்றும் முகம்மது சையது ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
News January 23, 2026
சென்னை: பேருந்தில் சிக்கி துடிதுடித்து பலி!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், கலைஞர் நகர் பணிமனையில் நேற்று காலை தொழில்நுட்ப பிரிவில் கிருஷ்ணன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். அப்போது ஜாக் சிலிப்பாகி கிருஷ்ணன் பேருந்தின் அடியில் சிக்கினார். சக தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News January 23, 2026
சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று காலை 10 முதல் 2 மணி வரை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.


