News November 28, 2025
சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு!

இன்று நவ-28 சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கிய கணக்கீட்டு படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல், விரைந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்’’
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்
Similar News
News November 28, 2025
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. 9 ஆண்டுகள் சிறை

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆடிவெள்ளியையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் காவலருக்கு கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் பேரில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கண்ணனுக்கு 3 பிரிவில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
News November 28, 2025
சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் மகேஸ்வர் -ராக்கி மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் கீர்த்திகா (20), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
News November 28, 2025
சென்னை சூப்பர் வேலை; ரூ.27,000 வரை சம்பளம்!

சென்னையில் Field Installation Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 620 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12th, ITI/Diplamo படித்த 18-35 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.20,000- ரூ.27,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் இங்கே <


