News December 18, 2025
சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்த பாம்பு!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் நுழைந்த பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக நேரத்தில் பாம்பு உள்ளே புகுந்ததால் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் பதுங்கியிருந்த பாம்பை தேடி பிடித்தனர். இதனால் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Similar News
News December 24, 2025
சென்னை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை சேவை நடைபெறும். பீக் நேரங்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ரயில் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட பீக் அல்லாத நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் அம்பாசிடராக துல்கர் சல்மான்!

60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்ற நகை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், நடிகர் துல்கர் சல்மானை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. இது நகைகளை வெறும் அணிகலன்களாக மட்டுமில்லாமல் ஒருவருடைய தனிப்பட்ட ஸ்டைல், உணர்வுகளின் பிரதிபலிப்பாக மாற்றவுள்ளது. துல்கர் சல்மானின் ஸ்டைல், தன்னம்பிக்கை ஆகியவை இந்நிறுவனத்தின் நற்பெயருக்கும், கொள்கைகளுக்கும் அடையாளமாக திகழும்.


