News November 6, 2025
சென்னை: மர்மமான முறையில் இறந்த தொழிலாளி!

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீஜூல் (31) கோல்டன் ஜார்ஜ் நகரில் கட்டடப்பணி செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவர் பணிக்கு செல்லாமல் தன் அறையில் இருந்தார். இரவு சக பணியாளர்கள் திரும்பி வந்த போது, பீஜூலை கழுத்தில் கயிறுடன் தரையில் கிடப்பதை கண்டனர். மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். போலீசார், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய சிறுவன்!

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியை சேர்ந்தவர் வெங்கட்ரமணன் பிரார்த்தனா தம்பதியினர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் இவர்களது ஒரே மகன் ரமணன் (17) தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தாய் பிரார்த்தனா மகனை எழுப்ப சென்றுள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News January 28, 2026
சென்னை: நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) நேற்று இரவு வேலை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி- பெங்களூரு நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சிக்னல் அருகே அவர் சென்ற காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது. சில நொடிகளில் கார் குபுகுபுவென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக செல்வகுமார் உயிர் தப்பினார்.
News January 28, 2026
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க


