News January 2, 2026
சென்னை: மனவேதனையில் கல்லூரி மாணவன் தற்கொலை!

வேளச்சேரி அம்பிகா தெருவை சேர்ந்தவர் முகேஷ் (19) தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் அம்மா துபாயில் வேலை செய்வதால், பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் இவரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முகேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
சென்னையில் த.வெ.க நிர்வாகி திடீர் மரணம்

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழக பத்தாவது வார்டு செயலாளர் ராமு தீவிரமாக கட்சி பணி ஆற்றி வந்தவர். இந்நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து உள்ளார். டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனை அறிந்த தவெக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 27, 2026
சென்னையில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

சென்னையில் 27.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அடையார், கேனால் பேங்க் சாலை, கேன்சர் மருத்துவமனை, காந்தி நகர், கேனால் கிராஸ் சாலை, விவேக்ஸ் ஷோரூம், கிரசென்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன்,மலர் மருத்துவமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
News January 26, 2026
சென்னை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சென்னை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


