News October 13, 2025

சென்னை மக்களே பண மோசடியா? கவலை வேண்டாம்

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்

Similar News

News October 13, 2025

கிண்டி அருகே காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

image

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரி (18). இவர் கிண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ்வரிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட காய்ச்சலால் அவதிபட்டிருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 13, 2025

சென்னை: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

சென்னை மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம்.<> இந்த இணையதளத்தில் <<>>உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர்!

News October 13, 2025

சென்னை: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!