News April 18, 2025
சென்னை மக்களே! செல்வம் செழிக்க போக வேண்டிய கோவில்

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரர் கோவில், சென்னை அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு இருக்கும் ஒரே கோவில் இதுதான். இக்கோவிலில், பௌர்ணமி, அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம. *நண்பர்களுக்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*
Similar News
News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
News April 19, 2025
பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <