News October 9, 2025
சென்னை மக்களே ஆதாரில் இனி இது கட்டாயம்!

சென்னை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) ஆதாரில் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News October 9, 2025
மநீம அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலையில் நடிகர் விஜய் வீட்டிற்கு தனியார் நிறுவன ஊழியர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
சென்னையில் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர், பாடி, திருமங்கலம், நொளம்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, அரும்பாக்கம், வடப்பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
News October 9, 2025
சைதாப்பேட்டை: பக்கோடா சாப்பிட்ட பெண் பலி

சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரிதா (38). இவர், நேற்று முன்தினம் இரவு வெங்கடாபுரத்தில் உள்ள சாலையோர கடையில் காலிபிளவர் பக்கோடா வாங்கி சாப்பிட்ட அடுத்த சில நிமிடத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசில் அவரது மகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.