News December 18, 2025
சென்னை மக்களுக்கு சப்ரைஸ்!

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் ஜன.2026ல் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பூந்தமல்லி, போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்கிறது. CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் 13 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகிறாராம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 24, 2025
கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை சேவை நடைபெறும். பீக் நேரங்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ரயில் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட பீக் அல்லாத நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் அம்பாசிடராக துல்கர் சல்மான்!

60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்ற நகை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், நடிகர் துல்கர் சல்மானை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. இது நகைகளை வெறும் அணிகலன்களாக மட்டுமில்லாமல் ஒருவருடைய தனிப்பட்ட ஸ்டைல், உணர்வுகளின் பிரதிபலிப்பாக மாற்றவுள்ளது. துல்கர் சல்மானின் ஸ்டைல், தன்னம்பிக்கை ஆகியவை இந்நிறுவனத்தின் நற்பெயருக்கும், கொள்கைகளுக்கும் அடையாளமாக திகழும்.
News December 24, 2025
சென்னை : இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

சென்னை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


