News March 22, 2024
சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News November 4, 2025
சென்னை பட்டினப்பாக்கத்தில் நுரை- பறந்தது உத்தரவு

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த அக். 22-ல் ஏற்பட்ட நுரை விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. கழிவுநீர் வெளியேற்றத்தால் ஏற்படும் இந்த நுரை, கடும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவித்த தீர்ப்பாயம், இதுகுறித்து ஜன. 19-க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் துறைகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.
News November 4, 2025
சென்னை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

சென்னை மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
சென்னை மெட்ரவில் வேலை; இன்று நேர்முக தேர்வு

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2ம் கட்ட திட்டத்தில் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு இன்று நடைபெறுகிறது பல்வேறு பணிகளுக்கு சென்னையில் நவ ( 4-11-2025) முதல் தொடங்கி (7-11-2025) வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது கோவையில் 10 மற்றும் 11ஆம் தேதிகளிலும், மதுரையில் 13, 14ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


