News January 7, 2026
சென்னை: பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
சென்னை: 4 பேர் அதிரடி கைது!

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை கயல்விழி என்பவரிடம் ரூ.38.88 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் 15-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்தது அம்பலமானது. கைதான ஜோஸ்பின் பியூலா, சித்ரா, கார்த்திகேயன் மற்றும் தினகரன் ஆகியோரிடமிருந்து போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 10, 2026
சென்னை: வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி!

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கவரேஷ் (19), செனாய் நகரிலுள்ள வாகனங்கள் சுத்தம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனத்தைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர் ரஞ்சித்குமாரையும் மின்சாரம் தாக்கியது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், கவரேஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
சென்னை: மெட்ரோ பனியால் துடிதுடித்து பலி!

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (22), போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரம்மாண்டமான கிரேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ பணிகளுக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், உபகரணங்கள் மீது முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


