News October 7, 2025

சென்னை: பேருந்தில் கூடுதல் கட்டணமா? உடனே CALL

image

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044-24749002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். (வெளியூர் செல்லும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News October 7, 2025

CHENNAI ONE APPல் புதிய அப்டேட்

image

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) உருவாக்கியுள்ள ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலி, பல்வேறு போக்குவரத்து பிரிவுகளில் ஒரே பாஸ் பயன்படுத்தி பயணிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.டி.சி பேருந்துக்கான மாதாந்திர பயண அட்டையை பெறும் வசதி சென்னை ஒன் செயலியில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் தெரித்துள்ளது.

News October 7, 2025

சென்னை: மாதம் ரூ.300 மானியத்துடன் சிலிண்டர்

image

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.300 மானியத்துடன் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும். <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை பூர்த்தி செய்து இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் நிலையத்தில் கொடுக்க வேண்டும். இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு, சென்னை மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 7, 2025

பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் கே. அம்சவேணி (83) இன்று காலை 7.30 மணிக்கு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் மறைவு குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ராதா ராமச்சந்திரன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

error: Content is protected !!