News September 21, 2025

சென்னை பெருநகர போக்குவத்து ஆணையக்குழு கூட்டம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Similar News

News September 21, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News September 21, 2025

யூடிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வடிவேலு

image

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆம் பொதுக்குழு கூட்டம் (செப்-21) காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசுகையில் நடிகர் நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசும் youtube களை முடக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

News September 21, 2025

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

error: Content is protected !!