News December 28, 2025
சென்னை: பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை

துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 57 வயது பெண், கடையின் ஷட்டரைத் தூக்க உதவிகேட்டபோது, கந்தன்சாவடியைச் சேர்ந்த சந்துரு (34) எனபவர் அவரை வலுக்கட்டாயமாக கடைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவைக் கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

சென்னை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 28, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை!

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் உள்ள அவர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் அதிகாலை முதல் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சற்றுமுன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News December 28, 2025
செயலில் செய்து காட்டியவர் விஜயகாந்த்: சீமான்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் உள்ள அவர் நினைவிடத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமத்துவம், சகோதரத்துவத்தை சொல்லளவில் இல்லாமல் செயலில் செய்து காட்டியவர் விஜயகாந்த். அவர் செய்த உதவியால் IAS, IPS ஆனவர்கள் ஏராளம்” என்றார்.


