News March 19, 2024

சென்னை: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 8, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

சென்னையில் இன்று (ஆக.8) திருவொற்றியூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிக்க பரிசீலனை

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இன்று (ஆக.07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

News August 7, 2025

JUST IN: சென்னையில் IT ஊழியர் விபரீத முடிவு

image

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!