News April 4, 2024

சென்னை: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் – அபராதம்!

image

சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் மின்சார ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எழும்பூர், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். தினந்தோறும் சில்லரை வியாபாரிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெற்று டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News February 10, 2026

சென்னை: உங்களிடம் VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

image

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.

News February 10, 2026

சென்னையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!