News February 26, 2026
சென்னை: நள்ளிரவில் வீடே அதிர வெடித்த சிலிண்டர்!

சென்னை பூக்கடை பகுதியில் நேற்று இரவு 2 சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேரில் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். ராகேஷ் அரவிந்த், சுராஜ், ஆண்டோ உள்ளிட்ட 7 பேர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் வெடிப்பு குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
சென்னை: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 26, 2026
சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோருக்கு குட் நியூஸ்!

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே மார்ச் 10 முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 4.5 கி.மீ நீளமுள்ள பாதையில் ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய இரண்டு புதிய நிலையங்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்தத் திட்டம் தற்போது பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2026
சென்னையில் துடிதுடித்து பலி

தண்டையார்பேட்டை, கார்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(56). பெயின்டரான இவர் ஜெயராஜ் என்பவரின் வீட்டில், பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது, கால் இடறி தரையில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


