News September 12, 2025
சென்னை தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுவேதரன்யன் (76) என்ற தொழிலதிபர் போலியான ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்து ரூ.22.30 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், குஜராத், ஆமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News September 12, 2025
சென்னையில் மினிபஸ் திட்டம் தோல்வி?

சென்னையில் தொடங்கப்பட்ட புதிய மினிபஸ் திட்டம், முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கியுள்ளது. தகுதி சரிபார்க்காமல் குலுக்கல் முறையில் அனுமதி வழங்கப்பட்டதால், உரிமையாளர்கள் பழைய பேருந்துகளை தன்னிச்சையாக இயக்குகின்றனர். வழித்தடம், கால அட்டவணை குறித்த தகவல்கள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
News September 12, 2025
உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை?- நீதிமன்றம் கேள்வி

தூய்மைபணியாளர்கள் போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர் தரப்புக்கு கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
News September 12, 2025
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிக்கு அழைப்பு

சென்னையில் வரும் 13ம் தேதி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் சாமிநாதன் இன்று ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று, விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார். முதல்வரின் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.