News December 20, 2025

சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

image

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 20, 2025

சென்னை: கரண்ட் பில் குறைக்க இதோ வழி!

image

சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

சென்னை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

சென்னை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம்(1800 599 01234)புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News December 20, 2025

சென்னை வாக்காளர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

image

சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, தவறாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம்-8 ஆகியவை சமர்ப்பிக்கலாம். பெயர் திருத்தம், மாற்றம், சேர்க்கை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!