News October 3, 2025
சென்னை: தீவிர சிகிசையில் தாதா நாகேந்திரன்

ஆயுள் தண்டனைக் கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 ஆக உள்ள பிரபல தாதா நாகேந்திரனுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரனின் உடல்நிலை மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 3, 2025
சென்னை: டிகிரி போதும்.. கனரா வங்கியில் செம வாய்ப்பு!

சென்னை மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <
News October 3, 2025
தீபாவளியை முன்னிட்டு 108 ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சார்பில் 108 ரயில்கள் இயக்கப்படும். அவற்றில் 54 ரயில்கள் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளன. 54 ரயில்கள் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.மகேஷ் தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
மெரினாவில் ஜிக்காட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஜிக்காட்டம் நடைபெற உள்ளது. தமிழர் ஆட்டக்கலைகளுள் ஜிக்காட்டமும் ஒன்றாகும். இந்த ஆட்டத்தை குறைந்தபட்சம் மூன்று பேர் முதல் எட்டு பேர் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்தை நீங்கள் மெரினாவில் காணலாம். (ஷேர் பண்ணுங்க)