News March 20, 2024
சென்னை: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வடசென்னை மக்களவை தொகுதிக்கு கலாநிதி வீராசாமி, தென் சென்னைக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னைக்கு தயாநிதிமாறன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 15, 2026
சென்னையில் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாக் கார்னர் லெஸ்(27). உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் தினம் இரவு தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த தந்தை ஜான், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 15, 2026
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.