News April 14, 2025

சென்னை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News August 5, 2025

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாரம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழுப்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் இன்று (ஆக.5) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

News August 5, 2025

சென்னையில் ஒருநாள் “ChatGPT” பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் ஆக.9-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல் கிண்டி, சென்னை 600-032 என்ற முகவரியில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News August 5, 2025

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…

image

சென்னையில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309359>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!