News February 17, 2026
சென்னை: தம்பதி கொடூர கொலை!

சென்னையை அடுத்த கானத்தூரைச் சேர்ந்த சுசில் ராஜ்(32) – கிரிஜா(29) தம்பதி. இவர்களது எதிர் வீட்டில் வசித்து வந்தனர் பார்த்திபன்(42) – ஜமுனா(35) தம்பதி. இந்நிலையில், சுசில்ராஜுடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகக் கூறி அடிக்கடி பார்த்திபன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று(பிப்.16) இரவு மது போதையில் இருந்த பார்த்திபன் சுசில்ராஜ் – கிரிஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
Similar News
News February 20, 2026
சென்னையில் துடிதுடித்து பலி!

சென்னை தண்டையார்பேட்டையில் 10வயது சிறுமி, துர்கா வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அப்போது மின்விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் விளையாடியபோது, எதிர்பாரத விதமாக புடவை கழுத்தை இறுக்கியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சிறுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்துகின்றார்.
News February 20, 2026
சென்னை: ஆசன வாயில் 6 சவரன் தங்கம்

கும்மிடிப்பூண்டி போலீசார் 3 நாட்களுக்கு முன், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நான்சொஜோய சின்(42) என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மறுநாளில் இருந்து, அவர் கழுத்தில் 6 சவரன் செயின் அணிந்தபடி வலம் வந்துள்ளார். இதையறிந்த சிறை காவலர்கள் செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், ஆசன வாயில் செயினை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
News February 20, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


