News July 8, 2025
சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை

ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களைக் காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் குறித்து சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று (ஜூலை 8) சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மக்கள் எந்த விதமான ஆபத்துகளில் சிக்காமல் இருக்க காவல்துறை எச்சரிக்கை.
Similar News
News July 9, 2025
சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 8, 2025
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக திருநங்கை தேர்வு

இன்று ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வில், திருநங்கை சரண்யா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து சரண்யாவை வாழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
சென்னை விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் பேர் பயணம்

சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது