News April 3, 2025
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News August 11, 2025
சென்னையில் கொலை.. கோவையில் சடலம்!

நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஜெயராமன், பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூனில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார். போலீசில் சிக்காமல் இருக்கா ஜெயராமனின் உடலை காரில் சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்து பாலமுருகனின் உதவியோடு கிணற்றில் வீசினர். பின் இருவரும் போலீசில் சரணடைந்தனர். மேலும், இக்கொலைக்கு பலரும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
News August 11, 2025
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் நடிகர் பரத்

சென்னையில் சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று (ஆக.10) நடைபெற்றது. தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில் சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் ஆர்த்தி கணேஷ் போட்டியிட்டார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
News August 11, 2025
“மின் கணக்கீட்டாளர்களுக்கு வார்னிங்”

சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பலமடங்கு மின்கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.