News March 24, 2024
சென்னை சாலையில் திடீர் வெள்ளம்?

சென்னை: போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
Similar News
News February 4, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய மாணவன்

கோயம்பேடு அன்னம்மா நகர் 2-வது தெருவைச் பிரவீன் (19) ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பூட்டிய கதவை நீண்ட நேரமாக திறக்காததால் சதேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
News February 4, 2026
புகார்களைத் தீர்க்க ‘சிட்டிசன் 360’ புதிய இணையதளம் அறிமுகம்

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.