News December 24, 2025
சென்னை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
Similar News
News December 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 28, 2025
தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06017) நாளை (டிசம்பர் 29 ) இரவு 9.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 30 இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06018) மறுநாள் காலை 9.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
News December 28, 2025
சென்னை: கடன் தொல்லையை நீக்கும் கங்காதீஸ்வரர்

சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து வகை கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். *கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*


