News October 26, 2024
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் சந்தைக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி மறுநாள் 1ஆம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை என கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 13, 2026
சென்னை: உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

சென்னை எழும்பூரில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இசசம்பவம் தொடர்பாக பெண் காவலரை அவரது கணவரே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக தாய் கண்ணீர் மல்க எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வெறும் உள்ளாடையுடன் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என காவலரின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
News February 13, 2026
சென்னை: 10 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நபர் கைது!

2013ம் ஆண்டு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், பிணையில் வெளியேறிய பின்னர் 2016 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 2025 ஏப்ரல் 9 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சதீஷை, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, வேளச்சேரி நேரு நகர் பகுதியில் நேற்று கைது செய்தனர்.
News February 13, 2026
கோயம்பேட்டில் பேருந்தை கொளுத்திய ஆசாமி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்ட நிலையில், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவர் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


