News August 30, 2025
சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News August 31, 2025
சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒருவழி AC சிறப்பு ரயில் இன்று மட்டும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மதியம் 12.45க்கு புறப்படும் இவ்வண்டி, காட்பாடி, சேலம் வழியாக இராஜபாளையத்தை நள்ளிரவு 23.57க்கு வந்தடையும். பின்னர் 23.59க்கு புறப்பட்டு, காலை 07.15க்கு திருவனந்தபுரம் வடக்கு அடையும். இந்த சேவை ஒருவழி மட்டுமே இயக்கப்படுவதுடன், முழுவதும் முன்பதிவு AC வண்டியாகும்.
News August 30, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆக.30) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 30, 2025
சென்னையில் காவலர் தற்கொலை

சென்னை அருகே இன்று (ஆக.30) தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மவுண்டு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த, மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலரான சந்திரமோகன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு பணி சுமை காரணமாக அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.