News May 30, 2024
சென்னை: கேலி செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டீ கடையில் நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார் என்பவர் இன்று(மே 30) டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது கடையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பெண் கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியுள்ளார். காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News May 8, 2025
சென்னை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 8, 2025
முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
News May 8, 2025
சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.