News April 20, 2024

சென்னை: குடும்பமாக 21 பேர் வாக்களிப்பு!

image

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அப்போது, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக சென்று வாக்களித்தனர். மேலும், 1977ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும், குடும்பத்துடன் ஒன்றாக சென்று வாக்களித்து வருவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தனர். பின்னர் 21 பேரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News February 12, 2026

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னையில், 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும், (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படும். மேலும், ரேஷன் கடைகள் செயல்பாடு, விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் குறைபாடு குறித்தும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது; உயர்நீதிமன்றம் கருத்து!

image

போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிப் -12 தெரிவித்துள்ளது. சென்னையில் பைக் ரேஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘போலீசார் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்க கூடாது. 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது’ என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News February 12, 2026

சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!